திருவானைக்காவல் ஆறு நாட்டு வேளாளர்தலைமை சங்கத்தில் ஆறுநாட்டு வேளாளர் திருமண தகவல் மையம் (கல்யாண மாலை) துவக்க விழா திருவானைக்காவல் சங்க கட்டிடத்தில் 27.8.2023 ஞாயிறு அன்று காலை 10-46 மணி அளவில் நடைபெற்றது . கல்யாண மாலையில் தங்களுடைய பெயர்களை பதிவு செய்யும் பொருட்டு கல்யாண மாலை வலைதளத்தை முன்னாள் ஆறு நாட்டு வேளாளர் சங்கத்தின் தலைவர் உயர்திரு P . தனபால் அவர்கள் துவக்கி வைத்தார்கள் . அந்நிகழ்வில் சங்கத்தின் தலைவர் திரு டாக்டர் பெ செல்வராஜ் பிள்ளை அவர்களும் துணைத்தலைவர் திரு பி . புரவி B.A ., அவர்களும் செயலாளர் திரு A. சதீஸ்வரன் அவர்களும் பொருளாளர் T . செந்தில்குமார் அவர்களும் , நிர்வாகக்குழு உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர். கல்யாண மாலையில் இன்று மட்டும் சுமார் 200 பேர் தங்களுடைய மகன் மற்றும் மகள் ஆகியோரின் ஜாதகத்தை பதிவேற்றம் செய்துள்ளனர் . பல்வேறு நாடுகளிலும் மற்றும் பல்வேறு சங்கங்கள் நடத்தி வந்த கல்யாண மாலை அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு அனைவரும் ஆறு நாட்டு வேளாளர் மேட்ரிமோனி என்னும் குடையின் கீழ் கொண்டு வரப்படுவார்கள் . தங்களின் விவரங்களை பதிவேற்றம் செய்வதற்கான லிங்க் ஆறுநாட்டு வேளாளர் வாட்ஸ் அப் குருப்பில் பகிரப்பட்டு வருகிறது . தாங்களே அதில் பதிவேற்றம் செய்வது செய்து கொள்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது . மேலும் ஏற்படும் சந்தேகங்களை சங்கத்தின் தலைவர் அவர்களிடம் கேட்டு தெளிவு பெறலாம் இதனை அனைத்து ஆறுநாட்டு வேளாளர் சமூகத்தை சார்ந்த பெருமக்கள் அனைவரும் பயன்படுத்தி பயன்பெறலாம் . https://arunaduvellalarmatrimony.com/register